ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் திரிசக்தி நாட்டிய நாடகம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், கோவை பரதாலயம் வழங்கும் திரிசக்தி நாட்டிய நாடகம் நிகழ்ச்சி கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்விட்ஸின் நிர்வாக இயக்குனர் எம்.கிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி நிகழ்வை துவக்கி வைத்தார்.

பொதுமக்கள் பலர் பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.