பி.எஸ்.ஜி. மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நேஷனல் மாடல் பள்ளி மாணவர்கள்

உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு, கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் மருத்துவர் சுதா ராமலிங்கம் மற்றும் மருத்துவர்களை, மருத்துவ கல்வியை விரும்பும் நேஷனல் மாடல் சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவ, மாணவியர்கள் நேரில் சந்தித்து மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மாணவ, மாணவிகளுக்கு மருத்துவர்கள் ஆவதற்கான ஆலோசனைகளையும், வாழ்த்துக்களையும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.