நோய்களை எதிர்கொள்ள தண்ணீர் அவசியம்

ஒரு நபர் தனது காலை நேர பானத்தை தண்ணீருடன் தொடங்குவதால், பல ஆரோக்கியமான  நன்மைகளை பெறலாம்.

உடலில் 60 சதவீதம் தண்ணீர் உள்ளது. சுவாசம் போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளாலும், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் உடல் தொடர்ந்து நாள் முழுவதும் தண்ணீரை இழக்கிறது, 18 வயதுக்கு மேலே இருப்பவர்கள் நாள்தோறும் இரண்டு முதல் மூன்று  லிட்டர் தண்ணீரை பருக வேண்டும்.

மேலும், ஒரு நபர் நாள் முழுக்க தண்ணீர் அருந்தாமல் அல்லது மிகவும் குறைந்த அளவில் தண்ணீர் பருகினால் அவருக்கு கண் எரிச்சல், தலைவலி, தொண்டை வறட்சி போன்ற நீர்ச்சத்து குறைபாடுகள் ஏற்படும். எனவே, நீரிழப்பைத் தடுக்க, தினமும் குடிப்பதிலிருந்தும் சாப்பிடுவதிலிருந்தும் ஏராளமான தண்ணீரைப் பெற வேண்டும்.

வெந்நீராக பருகும் பயன்கள்  :

  • குளிர்ந்த நீரை காட்டிலும் வெந்நீராக பருகினால் உடலுக்கு மிகவும் நல்லது. மனிதனின் பெருங்குடல் அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும்  முழு இயக்கத்தில்  இருக்கும்.
  • அப்போது வெந்நீர் பருகினால் செரிமானம், மலச்சிக்கல் தொடர்பான பிரச்னைகள் விலகிவிடும்.
  • ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவிகிறது. மேலும் உடலில் உள்ள செல்கள் புத்துணர்வாக இருக்கும்.

பலன்கள் :

இயந்திரங்களில் இணைப்புகள் உள்ளதை போல உடல் பாகத்தை இணைக்கும் மூட்டுகள் மிகவும் முக்கயமானதும். இத்தகைய மூட்டுகளில் ஏற்படும் உராய்வுகளை தடுக்க தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருநாளில் காலை அல்லது  இரவில் அவ்வப்போது வெந்நீர் அருந்திவந்தால் சருமம் பொலிவாகும்.

மேலும், வெதுவெதுப்பான நீர் உடல் கொழுப்பை உடைக்கவும், சிறப்பான இரத்த ஓட்டம்,  இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை  குணமாக்குகிறது. உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவை கட்டுப்படும். உணவு மண்டலம், சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் குணமாகும். சுவாச மண்டலம், நுரையீரல், இதயம், மூளை போன்றவற்றில் உள்ள கோளாறுகளுக்கு பயன் அளிக்கிறது.

நின்று கொண்டு தண்ணீர் பருகலாமா?

தொடர்ச்சியாக  தண்ணீரை நின்று பருகினால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அது வயிற்று உட்பகுதிக்குள் சென்று தெளித்து சிதறுகிறது. இதனால், நம் வயிறும், இரைப்பையும் கடுமையாக பாதிக்கும்.மேலும், உடல் திரவங்கள் பாதிக்கப்பட்டு கால் மூட்டு பகுதியை பாதித்து வலியை ஏற்படுத்தக்கூடும் எனவே, தண்ணீரை நின்று கொண்டு பருகக் கூடாது.

உணவு உண்ணும் போது தண்ணீரை தவிர்க்க வேண்டும்

மருத்துவர்களின் ஆலோசனைப்படி , உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் பருக வேண்டும் என்றும்  உண்ணும் போது தண்ணீர் பருகுவதைத்  தவிர்க்க வேண்டும் என்கின்றனர். உணவுடன் அல்லது உடனடியாக தண்ணீர் பருகுவதால்  அமிலத்தன்மை (அசிடிட்டி) மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். நாம் உண்ணும் உணவு செரிமானமாக 2மணி நேரம் தேவைப்படுகிறது, இதற்கிடையில் தண்ணீர் பருகுவது  செரிமானத்தை பாதிக்கிறது. எனவே உணவு உண்ட 45-60 நிமிடங்களுக்குப் பிறகு தான் தண்ணீர் பருக வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.