சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், சரவணம்பட்டி முதல் புலியம்பட்டி வரை 15 கி.மீ தொலைவிற்கு ரூ.78 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியினை நகர்ப்புற பகுதியின் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணியின் ஒருபகுதியாக சரவணம்பட்டி சாலையில் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைத்து சாலையை விரிவுபடுத்தும் பணி நடைபெறவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பணியை உடனடியாக தொடங்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

உடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேலுசாமி, நவீன்குமார், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் ராமுவேல், உதவி பொறியாளர் வெங்கடேஷ், உதவி ஆணையர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி பொறியாளர் உத்தமன் ஆகியோர் உள்ளனர்.