சினிமாகாரர்கள் அரசியலில் ஜொலிப்பது இனி சாத்தியமில்லை

ஆடிட்டர் குருமூர்த்தி செய்தியாளர்கள் சந்திப்பில்  கூறியதாவது, ‘_

அரசியலில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை குழந்தைகள் மற்றும் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ஒரு குழந்தை அரசியல்வாதியாக வரணும் என நினைத்தால் நல்லவர்கள் இருப்பதால் தைரியமாக முடிவெடுக்கும்.

விஜய்யை பற்றியும் சினிமாவைப் பற்றியும் எனக்கு தெரியாது. நான் சினிமா பார்ப்பது இல்லை.அப்படி இருக்க விஜயை பற்றி எப்படி தெரியும்.

தமிழ்நாட்டில் இனிமே சினிமாவிலிருந்து ஒருவர் வந்து  வெற்றியடைய முடியும் என்று தோனலை.

எம்ஜிஆர் ஒரு கட்சி அமைக்க காரணமே அவர்  திமுகவில் 30 ஆண்டுகள் எம்ஜிஆர் ரசிகர் மன்றம் இருந்தது. திமுகவுடன் வேலை செய்து அரசியலில் அத்துபடி. திமுகவிற்குள் அதிமுக இருந்தது ஒரு கூட்டத்தை மையமாக வைத்து கட்சியாக மாற்ற முடியாது. பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சி கும்பல் கூட்டணி உருவாகும் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

10 லட்சம் பேர் சேர்ந்து ஒரு கட்சியை உருவாக்குவது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். ஒரு கட்சி உருவாக கொள்கை வேண்டும்.  ஒரு கட்சி கொள்கையின் அடிப்படையில் முன்னேற அதற்கு 30 வருடங்கள் ஆகும்.

ஒரு கும்பலை கட்சியாக மாற்றுவது  எவ்வளவு சிரமம் என்று ரஜினிக்கும் தெரியும்.இதன் காரணமாக ரஜினிகாந்த் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டார்.    என்பது என் கருத்து.

எம்ஜிஆரை போல்அரசியலில் ஜொலிக்க விஜயகாந்த்தால் முடியவில்லை. பெரியார் என்றால் ஏற்கக்கூடிய முறையில் எழுத்து இருந்தால் பரவாயில்லை தமிழை காட்டுமிராண்டி மொழி என்கிறார் நீங்கள் செய்தியாக போடுவீர்களா தமிழர்கள் காட்டுமிராண்டி என்று கூறுகிறார்.

ஸ்டாலினுக்கு மெஜாரிட்டி இருக்கு இலாகா இல்லாத 4 அமைச்சர்களை கூட வைத்துக் கொள்ளலாம் நான் நல்லதா கெட்டதா என்பதை விட சட்டப்படி முடியுமா முடியாதா என்று சொல்கிறேன். மக்கள் கருத்து பெரிய அளவுக்கு உருவாகும்போது மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

அது திமுகவிற்கும் புரியும் பெரிய போராட்டத்தால் நடைபெறும் இவ்வாறு அவர் கூறினார்.