கோவையில் அசத்தப்போவது யாரு சீசன் 2 …ஜூலை 2- ம் தேதி நடைபெறுகிறது

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள பத்திரிக்கையாளர் கூட்ட அரங்கில் அசத்தப்போவது யாரு சீசன் இரண்டு காண செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஜய் டிவி மற்றும் சன் டிவியில் புகழ்பெற்ற கலக்கப்போவது யாரு அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகளை வழங்கிய டைரக்டர் ராஜ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்பொழுது அவர் கூறியதாவது, –

செல்போன் இல்லாத காலகட்டத்திலேயே தமிழகம் முழுவதும் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து சன் டிவியில் கலக்கப்போவது யாரு விஜய் டிவியில் அசத்தப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காட்டி உலகம் முழுவதிலும் மிகவும் பெருமை சேர்த்துள்ளோம்.

அதேபோல இப்பொழுது வருகிற ஜூலை 2-ம் தேதி நவஇந்தியா அருகே உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் அசத்தப்போவது யாரு சீசன் 2 நடைபெற உள்ளது அதில் விஜய் டிவி சன் டிவி புகழ் மதுரை முத்து கோவை குணா ஈரோடு மகேஷ் உட்பட பிரபலமான கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். அத்துடன் தமிழக முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 150-க்கும் மேற்பட்ட புதிய கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள் ஆதலால் கோவையில் உள்ள மக்கள் முழுவதும் இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்