மருதமலைக்கு செல்ல வனத்துறை எச்சரிக்கை !

கோவை மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி. காலனியில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் குமார் (30) என்ற வாலிபர், விறகு சேகரிக்க சென்ற போது யானையிடம் சிக்கி உயிரிழந்தார். அவருடன் சென்ற குமாரின் 3 வயது மகன் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், அவரது மனைவி கல்பனா காயமின்றி உயிர் தப்பினார் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வனத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் யானை தாக்கி வாலிபர் உயிரிழந்த நிலையில் மருதமலை கோவிலுக்கு படிக்கட்டு வழியாகவும், இருசக்கர வாகனத்திலும் பக்தர்கள் செல்ல வனத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மருதமலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்,

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் படிக்கட்டு வழியாகவும், மலை பாதை வழியாகவும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.