கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் பிரான்காஸ்கோபி பயிற்சி வகுப்பு 2018

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் நுரையீரல் துறை சார்பில் பிரான்கோஸ்கோபி பற்றி ஒருநாள் பயிற்சி வகுப்பு நடந்தது. நுரையீரல் மற்றும் சுவாச நோய்கள் பற்றிய அடிப்படை பயிற்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இதில், நுரையீரல், சுவாசநோய், தீவிர கவனிப்பு, மயக்கவியல் உள்ளிட்ட பணியில் உள்ள டாக்டர்கள், பயிற்சியாளர்கள் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்திய சுவாசவியல் கூட்டமைப்பு மற்றும் கோவை சுவாசவியல் சங்கம், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் இந்த பயிற்சி வகுப்பு நடந்தது. பிராங்காஸ்கோபி என்பது, சுவாச குழாய் வழியாக கருவியை செலுத்தி நுரையீரல் வரை பரிசோதனை செய்யும் முறையாகும்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா  ஜி பழனிச்சாமி கூறுகையில் ‘‘ இந்த வகையான தனித்துவமிக்க பயிற்சி வகுப்புகள்,  நம் நாட்டில் அடிக்கடி நடத்தப்படுவதில்லை ஆனால், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை அதிநவீன, தொழில்நுட்பத்துடன் தேவையானவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க கற்றுத்தருவதில் முன்னோடியாக உள்ளது. நம்நாட்டில் சர்வதேச தரத்தில் சுவாச பிரச்னைகளுக்கான உள், வெளி அல்ட்ரா சவுண்ட் சிகிச்சைகள் (Endobronchial Ultrasound), குளிர் தொழில்நுட்ப முறை சிகிச்சைக்கான கருவிகள், லேசர், கிரையோ தெரபி (Cryo therapy) போன்ற கருவிகளும் இங்குள்ளன,’’ என்றார்.

மேலும் சுவாச நோய் சிகிச்சை  நிபுணர்கள் டாகடர் சாந்தகுமார் மற்றும் டாக்டர் வேணுகோபால் அவர்கள் கூறுகையில், தொடர் மருத்துவ கல்வி, பயிற்சி வகுப்புகள், முகாம்கள் போன்ற நிகழ்ச்சிகளை கேஎம்எசிஹெச் இன்டர்வென்ஷனல் பல்மனாலஜி அகாடமி மூலம் தொடர்ந்து நடத்தி வருகிறது என்றனர்.