கோவையில் நடைபெற்ற மண்டல கல்லூரிகளுக்கான கைபந்து போட்டியில் , கோவை தொழில்நுட்ப கல்லூரி அணி வெற்றி பெற்றது.

கோவை அருகே கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் அண்ணா பல்கலைக் கழகத்தின் 9 ஆவது மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. 12 கல்லூரிகள் பங்கேற்ற இந்த போட்டிகளை கல்லூரியின் நிறுவனத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி துவக்கி வைத்தார். இந்த போட்டியில் இறுதி சுற்றில், கோவை தொழில் நுட்ப கல்லூரி மற்றும் பி எஸ் ஜி தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது. இதில் 33-36 என்ற புள்ளிக் கணக்கில் கோவை தொழில்நுட்ப கல்லூரி அணி அபார வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே பி எஸ் ஜி தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி அணிகள் இடம் பெற்றன. பரிசளிப்பு விழாவில் , கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன், கல்லூரி செயல் அறங்காவலர் சூர்யா, கல்லூரி இயக்குனர் அன்பழகன், கல்லூரி முதல்வர்   மோகன் தாஸ் காந்தி , கல்லூரி துணை முதல்வர் ரமேஷ் மற்றும் கல்லூரியினி உடற்கல்வி இயக்குனர்கள் ஜெயப்ரகாஷ் , ஜெகநாதன், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் , பரிசுகளும் வழங்கப்பட்டது.