கோவை நகர கூட்டுறவு வங்கிக்கு தேசிய விருது

சிறப்பான செயல்பாடு காரணமாக கோவை நகர கூட்டுறவு வங்கிக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.கோவை நகர கூட்டுறவு வங்கி 1920ம்ஆண்டு பதிவு செய்யப்பட்டு 1921ம்ஆண்டு மக்கள் சேவையை துவங்கியது.

இது, கடந்த ஆறு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டதால், சிறந்த நகர கூட்டுறவு வங்கியாக தேசிய விருது கிடைத்துள்ளது.வங்கி சரித்திரத்தில் முதன்முறையாக 2.74 சதவீதம் செயல்படாத சொத்துக்கள் பராமரித்ததால், சிறந்த செயல்பாட சொத்து நிர்வாக மேலாண்மைக்கான இரண்டாவது தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது. தமிழக கூட்டுறவு வங்கிகளின் சரித்திரத்தில் முதல் முறையாக கோவை நகர கூட்டுறவு வங்கி தேசிய விருது பெற்றுள்ளது.