கோவையில் கிராஃப்ட் பஜார், கைவினை பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி !

கோவை அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி ஜூன் மாதம் 16ஆம் தேதி, வெள்ளிக்கிழமை முதல் ஜூன் மாதம் 21ஆம் தேதி, புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது.

கிராஃப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு (சிசிடிஎன்) 1998ஆம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது. இந்திய கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களை ஊக்குவிப்பதே இவ்வமைப்பின் நோக்கமாகும். “கிராஃப்ட் பஜார்” மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள கைவினைத் தொழில் செய்பவர்களுக்கு (ஜவுளி மற்றும் கைவினைப் பொருட்கள்) அவர்களது பொருட்களைக் காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் ஒரு தளத்தை இந்த அமைப்பு வழங்குகிறது. இந்த ஆண்டு அஸ்ஸாம் முதல் கேரளா வரை 100க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியை தாஸ்கரி ஹாத் சமிதிரூ தில்லி ஹாத் அறக்கட்டளை நிர்வாகி ஜெயா ஜேட்லி வெள்ளிக்கிழமை காலை துவக்கிவைத்தார். உடன் கிராஃப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு, கோவை கிளை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியில் கலைப்பொருட்கள் – ஓவியங்கள், குருவாயூர் சுவரோவியங்கள். கைவினைப்பொருள் அரங்கு – பித்தளை, கண்ணாடி மற்றும் மரக் கலைப்பொருட்கள், மணிகள், லாக் ஆண்டு கண்ணாடி வளையல்கள், டோக்ரா, ஜூடிஸ், நாணல் மற்றும் கழிவு துணி பாய்கள், உளர் பூக்கள், பாண்டிச்சேரியில் இருந்து விளக்கு நிழல்கள், உலோகம், டெரகோட்டா, கல்சட்டி, மினியேச்சர் மண்பாண்டங்கள், நீல மண்பாண்டங்கள், மொசைக் கண்ணாடி, யோகா பாய்கள் மற்றும் மூங்கில் கைவினைப்பொருட்கள், கோலாபூரிச் சப்பல்கள், சணல் விரிப்புகள், மர வேலைப்பாடுகள், தோல் பொம்மைகள், புல் கூடைகள், எம்பிராய்டரி பைகள், கையால் அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள், குயில்கள், கலைப் பெட்டிகள் மற்றும் விளையாட்டு பொருட்கள்.

வண்ண ஆடைகள் பாக், தாபு ஆடைகள், சங்கனேரி ப்ரிண்ட்ஸ், தோடா, காஷ்மீரி, கலம்காரி, சாந்தேரி, புல்காரி, ஷிபோரி, நாராயன்பேட்டை, வெங்கட்கிரி, கோட்பேட், கோடாலிகருப்பூர், கர்நாடக ஸ்பெஷல், ஆர்கானிக் பருத்தி, கடவால், இக்காட், ஒடிசா, பருத்தி ஆடைகள், பெங்கால் டை அண்ட் டை, அஸ்ஸாம் நெசவுகள், கட்ச் சால்வைகள், பூஜோடி காலா பருத்திகள், கட்வில் பட்டுகள் மற்றும் பருத்திகள், பிகினர் கை எம்ப்ராய்டரி, ஆப்கானிஸ்தானின் தரைவிரிப்புகள், ஆஜ்ராக், மொடாஸ் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்பு ஆடைகள் காட்சிப்படுத்தப்படுகிறது.