நீட் தேர்வில் முதலிடம் பிடித்த தமிழக மாணவன்!

சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 12ஆம் வகுப்பு  பயின்ற மாணவர் பிரபஞ்சன் 2023-ல் நடைபெற்ற தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்று 720/720 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த வரலாற்றுச் சாதனைக்குக் காரணம் பிரபஞ்சனின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவையாகும்.

சுமார் 20,38,596 மாணவர்கள் இத்தேர்வினை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபஞ்சனின் இச்சாதனையை நீட் அகாடமியின் முதன்மை முதல்வர் உமாமகேஸ்வரராவ், ஐஐடி/நீட் அகாடமி மற்றும் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் ஆசிரியர்கள் ஆகியோர் பெருமை கொள்வதோடு பாராட்டி மகிழ்ந்தனர்.இவரின் இந்த சாதனைக்கு ஆசிரியர்களின் ஆதரவும் வழிகாட்டலும் பெரும்பங்கு வகித்தன.

இவரின் வெற்றியானது இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்கள் உத்வேகம் பெறவும், தன்னம்பிக்கைக் கொள்ளவும் வழிகாட்டியாக இருக்கும். மேலும் இச்சாதனையானது வேலம்மாள் கல்வி நிறுவனத்திற்குப் பெருமையைப் பெற்றுத் தருவதோடு, தொடர்ந்து மாணவர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் சூழலை உருவாக்கி மேலும் கூடுதல் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் முகமாக அமைந்துள்ளது. பிரபஞ்சனின் வெற்றிக்குப் பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் உடன் பயின்ற மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.