குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின கருத்தரங்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு!

கோவை மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் (NATIONAL CHILD LABOUR PROJECT) மற்றும் எஸ்.என்.எம்.வி காலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (NATIONAL SERVICE SCHEME) அமைப்பு சார்பில் சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின கருத்தரங்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் சுப்பிரமணி தலைமை வகித்தார்.

நாட்டு நலப்பணித் திட்ட (NSS) அலுவலர் க. லெனின்பாரதி வரவேற்புரை வழங்கினார். மேலாண்மை துறை இயக்குனர் முத்துக்குமார் மற்றும் வணிகவியல் புலத்தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் (NATIONAL CHILD LABOUR PROJECT) கோவை மாவட்ட திட்ட இயக்குனர் விஜயகுமார் “குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம், சமூக நீதியை காப்போம்” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் கூறியதாவது, ” எல்லா குழந்தைகளும் கட்டாயம் கல்வி பெற வேண்டும் என்று ஏட்டளவில் இல்லாது அதனை செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசுடன் இணைந்து நாம் அனைவரும் மேற்கொள்ளவேண்டும். பெற்றோர்களும் தாம் பெட்ரா குழந்தைகளுக்கு உணவும் கல்வியும் அளிப்பதே கடமை என்று உணரவேண்டும். வறுமையை காரணம் காட்டியோ, பணத்தேவையை காரணம் காட்டியோ குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது. குழந்தை தொழில் முறையை ஒழிப்பது பொது சமூகத்தின் கடமை” என்றார். அதன்தொடர்ச்சியாக, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.