பாரதியார் பல்கலைக்கழகத் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது! 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (Ph.D.) மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil) சேர்க்கைக்கான பொதுத் தகுதித் தேர்வு 2023 (CET – 2023) முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

பாரதியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவுபெற்ற கல்லூரிகளில் ஆராய்ச்சி பட்டம் (Ph.D., M.Phil.) பயிலுவதற்கான தகுதித் தேர்வானது (CET 2023) ஜூன் 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 51 பாடங்களுக்கு நடைபெற்ற இத்தகுதித் தேர்விற்கு 2199 தகுதியுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 1903 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

விடைத்தாள்கள் திங்கட்கிழமை (12.06.2023) மதிப்பீடு செய்யப்பட்டது. இத்தகுதித் தேர்வில் 1568 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளர். தேர்வு முடிவுகளை மாணவர்கள் பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம். மேலும் தங்களது தகுதிச் சான்றிதழை விரைவில் பதிவிறக்கம் செய்ய பணிகள் நடைபெற்று வருகின்றன.