இந்திய ராணுவத்துடன் ஐசிஐசிஐ வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ, இந்திய ராணுவத்துடனான தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளது. இதன் மூலம் இந்திய ராணுவ வீரர்களுக்கும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கும் தனது ‘டிபென்ஸ் சேலரி அக்கவுண்ட்’ மூலம் பல்வேறு சேவைகளை ஐசிஐசிஐ வங்கி வழங்கவுள்ளது.

ராணுவ வீரர்களுக்கான ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்,  லாக்கருக்கான முன்னுரிமை ஒதுக்கீடு, வீரதீர செயல்களுக்க்காக பரிசுகளை வென்ற வீரர்களுக்கு வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் வாகனக் கடன்களுக்கான புராஸஸிங் கட்டணத்தில் இருந்து விலக்கு  உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இதன்மூலம் வழங்கப்பட உள்ளன.  மேலும் ராணுவ வீரர்கள் ஐசிஐசிஐ ஏடிஎம்கள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி அல்லாத ஏடிஎம்களில் அளவில்லாத வகையில் இலவச பரிவர்த்தனைகளை செய்துகொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

கூடுதலாக ராணுவ வீரர்களுக்கு புதுப்பிக்கத்தக்க பயன்களில் ஒன்றாக அவர்களுக்கு காப்பீடுகளும் வழங்கப்படுகின்றன. இதன்படி விமான விபத்து இறப்பு காப்பீடாக ரூ.1 கோடியும், தனிநபர் காப்பீடாக ரூ 30 லட்சமும்,  பணியின்போது காயமடைந்து ஊனமடைபவர்களுக்கான காப்பீடாக ரூ.30 லட்சமும் அனைத்து ராங்குகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது. ராணுவ வீரர்கள் விபத்துகளின்போது இறந்தால் அவர்களின் 2 வாரிசுகளுக்கு அவர்கள் பிளஸ் டூ படித்து முடித்த அடுத்த 4 ஆண்டுகளுக்கு மேற்படிப்புக்காக ஆண்டுதோறும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு இந்திய ராணுவத்தின் லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி, தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் வங்கியின் மூத்த பொது மேலாளர் மற்றும் பிராந்திய வர்த்தக தலைவரான திரு குமார் ஆஷிஷ் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த சலுகைகளைப் பற்றிக் கூறும் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரான திரு அனுப் பக்ஸி, இந்திய ராணுவத்துடன் கூட்டுச் சேர்வதில் ஐசிஐசிஐ வங்கி பெருமை கொள்கிறது. ராணுவ வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்வேறு காப்பீட்டு திட்டங்களையும், போரில் மரணமடையும் ராணுவ வீரர்களின் வாரிசுகளின் உயர் கல்விக்காக நிதியளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த புதுப்பிக்கப்பட்ட சேவைகள் ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நம்புகிறோம்” என்றார். டிபென்ஸ் சாலரி அக்கவுண்ட் மூலம் ஐசிஐசிஐ வங்கியில் வாடிக்கையாளராக சேர்வதற்கு விண்ணப்பிக்க, ராணுவ வீரர்கள் அருகில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் கிளைக்கு சென்று வங்கி அதிகாரிகளை சந்தித்து பேசலாம். இவ்வங்கியின் அதிகாரிகள் கண்டோன்மெண்ட் மற்றும் ரெஜிமெண்ட்களுக்கு வரும்போதும் இந்த வங்கியில் டிபென்ஸ் சாலரி அக்கவுண்டில் சேரலாம்.