கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டு விழா, வேலை வாய்ப்பு தின விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழா கல்லூரியில் கொண்டாடப்பட்டது.

கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி. ராமசாமியின் வழிகாட்டுதலின்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில், பெங்களூரு சி டாக் அட்வான்ஸ் கம்ப்யூட்டிங் மையத்தைச் சார்ந்த எஸ்.டி.சுதர்சன் சிறப்பு விருந்தினராகவும், சென்னை மெக்கென்சி நிறுவனத்தைச் சார்ந்த கே.கணேஷ் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர். விளையாட்டு தின விழாவிற்கு கோவை ராயல் கேர் மருத்துவமனையின் முதல் நிலை மருத்துவர் கார்த்திகேயன் கலந்துகொண்டார்.

விழாவில் கல்லூரி முதல்வர் அகிலா ஆண்டறிக்கை வாசித்தார். அதில், “கடந்த வருடம் சர்வதேச அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்களோடு ஏற்பாடு செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவற்றின் விளைவாக மாணவர்கள் அடைந்த பயன்பாடுகள், மேலும் தேசிய அளவில் பல்வேறு இந்திய தொழில்நுட்ப கழகங்களில் மாணவர்கள் பங்கேற்று பெற்ற வெற்றிகள், விருதுகள், சாதனைகளை பற்றி குறிப்பிட்டார்.”

நிகழ்வில் இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. அதில் சிறந்த மாணவராக பயோமெடிக்கல் துறையை சேர்ந்த அனுஷ் மற்றும் சிறந்த மாணவியாக கணினி அறிவியல், பொறியியல் துறை சார்ந்த லட்சுமி பிரபா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களும், தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், ஒவ்வொரு துறையிலும் சிறந்த மாணவர்களுக்கான விருதும், அவர்களுடைய தொழில் முறை சார்ந்த பிரிவுகள் மற்றும் தனி பிரிவுகள் சார்ந்த விருதுகளும் வழங்கப்பட்டன. அது தொடர்ந்து ஆராய்ச்சி மேம்பாட்டு துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆய்வுகளை மேம்படுத்தி வெற்றியெடுத்து செய்த ஆசிரிய பெருமக்களுக்கும், மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து இந்த ஆண்டு வேலை வாய்ப்பு சாதித்த மாணவர்களுக்கு சம்பளம் பெற்ற மாணவர்களுக்கும், வேலை வாய்ப்புகள் தனித் திறனை வெளிப்படுத்திய மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.