எஸ்.என்.எஸ் கலை கல்லூரியில் இன்னோவேஷன் ஹப் திறப்பு

டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலக்ஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி மையம் “எஸ்.என்.எஸ் இன்னோவேஷன் ஹப்” திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் நட்ஸ் டெக்னோவேஷன் தலைமை நிர்வாக அதிகாரி கௌதம் கிருஷ்ணமூர்த்தி, பயிர்கால் தலைமை நிர்வாக அதிகாரி விக்னேஷ் குமார் மற்றும் டிரக் டாக்ஸி நிறுவனர் நோயல் ஜெரால்ட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மையத்தினை திறந்து வைத்தனர்.

கோயம்புத்தூர் ட்ரோல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை இயக்குநருமான கார்த்திக் எத்திராஜ், கோயம்புத்தூர் இ-ஆடிட்டர் அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சதீஷ் ராமலிங்கம், ஸ்டார்ட்அப் திட்டத் தலைவர் சக்திவேல் மற்றும் ஸ்டார்ட்அப் டிஎன் அமைப்பில் இயங்கும் “ஆடுகளம்” என்ற ஐடியா பிட்ச் அவர்களின் வழிகாட்டுதலுடன் நிகழ்வு தொடங்கப்பட்டது.