நீலாம்பூரில் பி.எஸ்.ஜி நகர்ப்புற சுகாதார மருத்துவ மையம் புதுப்பொலிவுடன் திறப்பு

கோவை பி.எஸ்.ஜி அறநிலையம் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார மருத்துவ மையங்கள் கோவை மாநகரின் குறிப்பிட்ட சில இடங்களில்  செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை மருத்துவர் மற்றும் இணை மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் பணிபுரிந்து ஆரம்பகட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

அந்த வகையில் கோவை நீலாம்பூர் பகுதியில் செயல்பட்டு வந்த பி.எஸ்.ஜி நகர்ப்புற சுகாதார மருத்துவ மையம் தற்போது புதுப்பிக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்காக மருத்துவ சேவை துவக்கப்பட்டுள்ளது. இதனை பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன் மற்றும் பி.எஸ்.ஜி ரீசர்ச் அண்ட் இன்னோவேஷன் டைரக்டர் டாக்டர் சுதா ராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்த மருத்துவ மையம் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும். இங்கு ஆரம்பகட்ட நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். மேல்சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மிக குறைந்த கட்டணத்திலேயே இந்த மருத்துவ மையம் செயல்படுவதால் நீலாம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் செயல்பட்டுவருகிறது.