ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தொடக்கநிலை ரீசார்ஜ் ரூ.99 – வி.ஐ நெட்வொர்க்கில் சேர அழைப்பு

தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான Vi, தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களை வெறும் 99 ரூபாய் ரீசார்ஜ் மூலம் தனது நெட்வொர்க்கில் சேர அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியா முழுவதுக்குமான மலிவான கட்டணத்தில் 99 ரூபாய் தொடக்க நிலை ரீசார்ஜ் திட்டத்தை வி.ஐ வழங்குகிறது. இப்பொழுதே Vi நெட்வொர்க்கிற்கு மாறுங்கள் என்று பொருள் படும் வகையிலான புதிய பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம் மொபைல்போன் வாடிக்கையாளர்களை வி.ஐ நெட்வொர்க்கில் இணைய அழைக்கிறது.

வோடஃபோன் ஐடியா லிமிடெட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கான கிளஸ்டர் பிசினஸ் ஹெட். முரளி கூறுகையில்: தமிழ்நாட்டில் மொபைல் ஃபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் மொபைல் போன் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களும் கூட இப்போது 99 ரூபாயில் Vi நெட்வொர்க்கில் சேரலாம். இதன் மூலம் இந்த டிஜிட்டல் யுகத்தில் மொபைல் கனெக்ட்டியின் மூலமான ஏராளமான பலன்களைப்பெற்று பயனடைய முடியும்.

இந்த சிறப்பு சலுகையின் மூலம், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் மொபைல் ஃபோன் பயன்படுத்த உதவுவதோடு, வாடிக்கையாளர்கள் எந்நேரமும் தங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்திருக்க வேண்டுமெனவும் எதிர்பார்க்கிறோம் என்றார்.