வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நிதி நிர்வாகப் பிரச்சினை – ஆய்வில் தகவல்

அவரவர் இருந்த இடங்களிலேயே தங்கள் வேலையை செய்யும் சூழல் தற்போது நிலவி வருகிறது .இருப்பினும் மக்கள் ஒரு இடத்தில் வேறு இடங்களுக்கு இடம் பெயரத்துவங்கி உள்ளனர். இந்த இடம் பெயருதலில் அவர்களுக்கான மிகப்பெரியதடையாக நிதிபிரச்சினைகள் இருப்பதாக எச்எஸ்பிசி நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மேலும் எச்எஸ்பிசி மேற்கொண்ட இந்த ஆய்வின் மூலம், அதன் 10 முக்கிய சந்தைகளில் 9 கோடிக்கும் அதிகமான சர்வதேச வாடிக்கையாளர்கள் வேலை நிமித்தம் மற்றும் படிப்பு சம்பந்தமாக வெளிநாட்டில் வசிக்கின்றனர் என்று தெரிய வந்திருக்கிறது.

இந்த இடமாற்றத்தின் போது அவர்கள் எதிர்கொள்ளும் நிதிசவால்கள், இடமாற்றத்தின் அழுத்தங்கள் மற்றும் அது அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவற்றையும் இந்த ஆய்வு தெளிவாக கூறுகிறது.

இந்த ஆய்வின்படி, இடமாற்றம் செய்த 75 சதவீதம் பேர், வங்கிக்கணக்கு, சேவைகள் மற்றும் இணையம் போன்ற முக்கியமான விஷயங்களை பெறுவதில் மிகுந்த சிரமப்பட்டதாகவும், தாங்கள் முதலில் வந்தபோது அமைதியற்ற சூழல் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

வங்கிக்கணக்கு இல்லாதது குறித்தும், வீட்டைப்பாதுகாப்பது குறித்தும் அவர்கள் கடுமையாக போராடுகிறார்கள். மேலும் நிரந்தர முகவரி இல்லாத காரணத்தால் அவர்களின் குழந்தைகளை பள்ளியிலும் சேர்ப்பதும் மிகுந்த பிரச்சினையாக உள்ளது.

வாங்கிய கடனை செலுத்த முடியாத காரணத்தால், பலர் வெளிநாடுகளுக்கு செல்லமுடியாமல் அது பெரும் தடையாக உள்ளது. இந்தியாவில் உள்ள சர்வதேச குடிமக்களில் ஐந்தில் நான்கு பேர் அதாவது 78 சதவீதம்பேர் இந்த காரணத்தால் அத்தியாவசிய சேவைகளான கிரெடிட்கார்டு, மொபைல்போன் மற்றும் சேவைகள் போன்றவற்றை பெற போராடியுள்ளனர்.

மேலும், பதிலளித்தவர்களில் இந்தியாவுக்கு செல்லத்திட்டமிடும் கிட்டத்தட்ட 61 சதவீதம் பேர் தங்கள் கடனை உடனடியாக திருப்பி செலுத்த முடியாது என்ற காரணத்தால் கவலை அடைந்துள்ளனர்.பொருத்தமான நிதிச்சேவைகளை கண்டறிவது என்பது இந்தியாவுக்கு செல்லத்திட்டமிடுபவர்கள் இடையே உள்ள ஒரு பொதுவான கவலையாக உள்ளது.

பணப்புழக்கத்திட்டமிடல் என்பது வெளிநாடுகளுக்கு செல்லும்போது கருத்தில்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். வேலை, படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளவர்களில் 53 சதவீதம்பேர் இந்தியாவுக்கு வர விரும்புகின்றனர். ஆனால் அவர்களின் பெரும்பிரச்சினையாக பணப்புழக்க பிரச்சினை இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்தியாவிற்கு இடம்பெயரத்திட்டமிட்டுள்ளவர்களில் 50 சதவீதம் பேர் தாங்கள் அவ்வாறு செல்லும் போது, தங்களின் நிதிநிலையை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து தெரியவில்லை என்றும் கூறி உள்ளனர். ஏற்கனவே இடம் பெயர்ந்தவர்களில் 67 சதவீதம் பேர் நிதியை நிர்வகிப்பது தொடர்பாக தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

அதே சமயம், இன்னும் இந்தியாவில் வசிக்க, வேலை செய்ய அல்லது படிக்கத்திட்டமிடுபவர்களுக்கு, நிதி ரீதியாக தயாராவதற்கு தங்களுக்கு யாரும் உதவவில்லை என்று சர்வதேச குடிமக்களில் இருவரில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து எச்எஸ்பிசி வங்கியின் சில்லறை வங்கி செயல்பாடுகள் மற்றும்ஆலோசனைக்குழு மற்றும் தனிப்பட்ட வங்கியியல் பிரிவுதலைவர் டெய்லன்டுரான் கூறுகையில், வெளிநாட்டிற்குச்செல்வது என்பது உற்சாகமானதுதான், ஆனால் அதேசமயம் சர்வதேச அளவில் உங்கள் நிதிநிலைகளை நிர்வகிப்பது என்பது ஒரு போராட்டமாக இருக்கக்கூடாது. எங்கள்ஆராய்ச்சியின் மூலம் சிலர் நிதித்துறை சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள் என்பது தெளிவாக தெரிய வந்திருக்கிறது.