திருப்பதியில் இனி தரிசன டிக்கெட் பெற ஆதார் கட்டாயம்

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்து செல்கிறார்கள். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இனி திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் பெற ஆதார் அட்டை இனி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி தரிசன டிக்கெட் பெற இயலாது எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.