பி.எஸ்.ஜி தொழில் நுட்பக்கல்லூரியில் கருத்தரங்கம்

பி.எஸ்.ஜி தொழில் நுட்பக்கல்லூரியின் உற்பத்தியியல் துறை மற்றும் யுனிவர்சிட்டி துலூஸ் III க்ளெமென்ட்அடர் இன்ஸ்டிடியூட் பிரான்ஸ் இணைந்து “மேம்பட்ட விண்வெளிப்பொருட்களின் உற்பத்தியில் புதுமை” என்ற தலைப்பில் இரண்டு நாள் ஆராய்ச்சிக் கருத்தரங்கை நடத்தியது.

இந்தியா மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை ஒன்றிணைத்து, மேம்பட்ட விண்வெளிப் பொருட்களின் உற்பத்தி மற்றும் இயந்திரத்துறையில் சமீபத்திய போக்குகள், முன்னேற்றங்கள் மற்றும் சவால்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் முக்கிய விரிவுரைகள், தொழில் நுட்ப அமர்வுகள் மற்றும் குழுவிவாதங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மேம்பட்ட பொருட்கள் உற்பத்தி நுட்பங்கள் மற்றும் எந்திர செயல் முறைகளின் மாதிரியாக்கம் இடம்பெற்றது.

இதில், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், அவர்களின் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், எதிர்கால ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் ஒரு தளத்தை வழங்கியது.