இந்திய அளவில் முதலிடம் ட்விட்டரில் ட்ரெண்டாகும் #HBDMKStalin70 ஹேஷ்டேக்!

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள், திமுக தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, #HBDMKStalin70 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

மு.க.ஸ்டாலினின் புகைப்படத்துடன் ட்விட்டரில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதால், ட்விட்டர் டிரண்டிங்கில் #HBDMKStalin70 என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.