தடாகம் நான்கு வழி சாலை பணியை துரிதபடுத்த கோரி ஆட்சியரிடம் மனு

கோவை மாநகர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்க பணிகளை துரிதபடுத்த வேண்டும் என சாலை பயனாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகர சாலை பணியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கோவை மாநகர பகுதியான காந்தி பார்க் முதல் கணுவாய் வரையிலான தடாகம் சாலையை நான்கு வழி சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு ஓர் ஆண்டு ஆகியுள்ளது. இதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படாமல் தடைபட்டு இருப்பதாகவும், அதே போல் அப்பகுதியில் குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்களும் நிகழ்வதாகவும் தெரிவித்தனர்.

மேலும் ஜீவா நகர், கே.கே புதூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிகளை துரிதப்படுத்தி, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தனர்.