நிர்மலா கல்லூரியில் +2 மாணவிகளுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

நிர்மலா மகளிர் கல்லூரியும், ரோட்டரி கோயம்புத்தூர் கேலக்சியும் இணைந்து நடத்திய ‘தேர்வு தயாரிப்பு’ குறித்து வெற்றி நிச்சயம் வழிகாட்டி நிகழ்ச்சி +2 மாணவிகளுக்கு கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

தன்னம்பிக்கைப் பேச்சாளர் விஜய் டிவி புகழ் ஜெகன் உரையாற்றினார். தேர்வு எழுதுவதற்கு தேவைப்படும் குறிப்புகளை வழங்கினார். மன அழுத்தம், மறதி போன்ற தேர்வுப் பயங்கள் இல்லாமல் எப்படி தேர்வினை எதிர்கொள்வது குறித்தும் பேசினார்.

மாணவிகள் தங்களின் படிப்புத்திறத்தை உயர்த்தவும், அறிவுத்திறனையும், நினைவாற்றலையும் வளர்த்துக்கொள்ளவும் வழிகாட்டினார்.