என்.ஜி.பி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

டாக்டர். என்.ஜி.பி.தொழில்நுட்பக் கல்லூரியின் வெளிநாட்டுக் கல்விக்கான மையம், எஸ்1 – யூ.கே கல்வியுடன் இணைந்து மாணவர்களுக்காக “டிஜிட்டல் ஹெல்த்கேரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கை நடத்தியது.

இதில், இங்கிலாந்து அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் அட்வான்ஸ் ஃபங்ஷனல் மெட்டீரியல்ஸ் துறையின் பேராசிரியர் ஜேம்ஸ் மெக்லாலின், உலகளாவிய ஆட்சேர்ப்பு மற்றும் ஈடுபாடு துறையின் பேராசிரியர் பால் குயின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். கல்லூரி முதல்வர் பிரபா கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார்.