கோவை பால் கம்பனி அருகே ‘பாடிஜீல் பிட் ஒர்க்ஸ்’ உடற்பயிற்சி கூடம் திறப்பு

கோவை பால் கம்பனி அருகே பாடிஜீல் பிட் ஒர்க்ஸ் உடற்பயிற்சி கூடத்தின் புதிய கிளை துவக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை பாடி பில்டிங் உலக சாம்பியனான ராஜேந்திரன் மணி மற்றும் கூக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் நட்சத்திரம் புகழ் ஆகியோர், பாடிஜீல் பிட் ஒர்க்ஸின் நிறுவனர் க்ரிஸ் பீத்தொவன் முன்னிலையில் இந்த புது கிளையை துவக்கி வைத்தனர்.

7000 சதுரடியில் அமைக்கப்பட்ட இந்த குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தில் நவீன உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளன.

இது பற்றி க்ரிஸ் பீத்தொவன் கூறுகையில்: தரமான பயிற்சியாளர்களும், உடற்பயிற்சி சாதனங்களும் இந்த கூடத்தில் உள்ளது. இதனால் எங்களை நாடி வரும் வடிக்கையாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட்டை தரமுடியும்.

உடற்பயிற்சியாளராக சர்வதேச அளவில் தரசான்றிதழ் கொண்டவர்களை மட்டுமே பயிற்சியாளர்களாக நியமனம் செய்துவருகிறோம். எங்களிடம் 30 சிறப்பான பயிற்சியாளர்கள் உள்ளனர். இங்குள்ள உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்துமே மிக தரமானவை. இவைகள் தாய்வான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. மேலும், ‘டுன்டுரி’ எனும் பின்லாந்து நாட்டின் உடபயிற்சி சாதனங்களை தமிழ்நாட்டில் கொண்டுள்ளோம்.

இந்த உடற்பயிற்சி கூடமானது ஒரு நாளைக்கு 17 மணி நேரம் இயங்கக்கூடியது. காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து நாட்களிலும் இயங்கும் என்றார்.