ரத்தினம் கல்லூரியில் என்.சி.சி மாணவர்களுக்கு கலைப்போட்டி

ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என்.சி.சி சார்பாக திறனை வளர்க்கும் பொருட்டு யுத் என்ற தலைப்பில் கல்லூரிகளுக்கிடையேயான கலைப்போட்டி நடைபெற்றது.

இப்போட்டியானது தேசி மாணவர் படையில் பங்குபெறும் வீரர்கள் தங்களுடைய திறமைகளை பரிசோதித்துக் கொள்ளும் களமாகவும், மேலும் தங்களை தேசிய மாணவர்கள் படைக்கான பல்வேறு தேசிய அளவிலான முகாம்களுக்கு தாயர்படுத்திக் கொள்ளுகின்ற விதமாகவும் அமைந்தது.

இந்நிகழ்வில் சுமார் 20 பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து 261 மாணவர்கள் 180 மாணவிகளும் கலந்து கொண்டனர். சுமார் 400 க்கு மேற்பட்ட தேசிய மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்வில் 2.4 கிலோமீட்டர் ஒட்டப்பந்தயம், வினாடி, வினா, பேச்சுப்போட்டி, பல்வேறு பல்வேறு கலைநிகழ்சிசகள் நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் மாணிக்கம், கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியம் பரிசுகள் வழங்கினர்.