உடல் பருமன் தினத்தையொட்டி மார்ச் 5 பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ஓவியப் போட்டி

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 அன்று, ‘உலக உடல் பருமன் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் உடல் பருமனுக்கு எதிரான போராட்டம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்ற தலைப்பில் மார்ச் 5 ஆம் தேதி ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது.

5 வயது முதல் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டிக்கு விண்ணப்பிக்க வரும் 28 ஆம் தேதி கடைசி நாள். ஒவ்வொரு பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.