என்.ஜி.பி கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “உலகளாவிய வணிகச் சூழல் மீள் உருவாக்கம்” என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது.

பெங்களுரூ, எம்.டி.சி குளோபல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் போலாநாத் தத்தா கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கி பேசுகையில்: உலகளவில் தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா முயற்சிகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு குறித்து மாணவர் சமூகத்திற்கு எடுத்துரைத்தார். தொழில் 3.0 இன் முக்கியத்துவத்தையும் எதிர்காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் தாக்கத்தைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்

ஜப்பான் நாட்டைச் சார்ந்த சுயதொழில் ஆலோசகர் டோமியோ சோகாய், கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தில் இந்திய ஜப்பானிய உறவுகள் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும், இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையேயான ஒற்றுமையைப் பற்றி குறிப்பிடும் போது, ஆகஸ்ட் 15 ஆம் தேதியை இந்தியாவில் சுதந்திர தினமாகக் கொண்டாடப் படுவதாகவும், ஜப்பானில் இரண்டாம் உலகப் போரின் குறிப்பிடத்தக்க நாளாக நினைவு கூறுவதாகவும் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் நிறுவனமான, பால்மர் லாரை நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி செயல் தலைவர் தியாகராஜன் ‘கொரோனா தொற்றுக்குப் பின் விநியோகச் சங்கிலி மேலாண்மை’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.