தேசிய அளவிலான ரோபோட்டிக் போட்டி: 300 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு

இந்தியன் பப்ளிக் பள்ளி சார்பில் சர்வதேச அளவில் இந்திய மாணவர்கள் ரோபோடிக் வடிவமைப்பில் சாதிப்பதற்காக தேசிய ரோபோடிக் போட்டி 2023 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் வரும் 11ஆம் தேதி கோவில்பாளையம் இந்தியன் பப்ளிக் பள்ளியில் தேசிய அளவிலான போட்டி தொடங்குகிறது. ஒரு நாள் நடைபெறும் போட்டியை கோவை காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் துவக்கி வைக்கிறார். பள்ளி வளாகத்தில் இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைவர் அசோக்குமார் ஏற்பாடு செய்துள்ளார்.

தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 300 பள்ளிகள் இதில் பங்கேற்கின்றனர்.

ஆரம்பக் கல்வியில் இருந்தே வளர்ந்து வரும் மாணவர்கள் மிகப் பெரிய சாதனையை பெற தன்னம்பிக்கையும், திறமையும் வளர்த்துக் கொள்ள இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இந்தியன் பள்ளி நிறுவனர் அசோக் குமார் தெரிவித்தார்.