வேளாண் பல்கலை மாணவிகளுக்கு முனைவர் பட்டபடிப்பு உதவித் தொகை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையைச் சேர்ந்த நான்கு மாணவிகள் முனைவர் பட்டபடிப்பு உதவித் தொகை பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கான உயர்கல்வி ஊக்கத் தொகை உட்பட பெண்களின் நிலையை மேம்படுத்த இந்திய மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க, பல்கலைக்கழக மானியக்குழு, ஒற்றைப்பெண் குழந்தைகளுக்கான சாவித்ரிபாய் ஜோதிராவ் ஃபுலே உதவித் தொகையை (SJSGC) நிறுவியுள்ளது.

SJSGC என்பது முனைவர் பட்டபடிப்பு வரையிலான படிப்பைத் தொடர்வதற்கான உதவித் தொகை வழங்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் இலக்கு “ஒற்றை பெண் குழந்தை” ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விண்ணப்பங்களின் அடிப்படையில் உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

மாணவி அபர்ணா
மாணவி தாரிணி

மாணவி இலக்கியா     
மாணவி பரிபூரணி

2022 ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை வாய்ப்புகள் செப்டம்பர் 2022 இல் அறிவிக்கப்பட்டது. கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் பூச்சியியல் துறையில் முனைவர் பட்டபடிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள் அபர்ணா, தாரிணி, இலக்கியா மற்றும் பரிபூரணி ஆகியோர் SJSGC உதவித் தொகை பரிசீலனைக்காக UGC க்கு தங்கள் ஆராய்ச்சி முன் மொழிவை வழங்கியிருந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் முடிவுகள் பிப் 6 அன்று UGC இணையதளத்தில் வெளியிடப்பட்டன. விண்ணப்பித்திருந்த நான்கு மாணவிகளும் உதவித் தொகை பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.