கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பர்ப்பிள்ஸ் டே எனும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி தலைமை தாங்கினார்.

1970 களில் பயின்ற மாணவிகள் முதல் 2000 ஆம் ஆண்டு பயின்ற மாணவிகள் என பல்வேறு காலகட்டங்களில் பயின்ற மாணவிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கல்லூரி கால நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக, முன்னாள் மாணவியான கவிதாயினி உமா மகேஷ்வரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து விழாவில் சுமார் ஐந்து லட்சம் மதிப்பிலான கல்வி உதவி தொகையை முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாக உறுப்பினரான சுகந்தா சம்பத்குமார், கல்லூரி முதல்வர் மீனாவிடம் வழங்கினார்.

விழாவில், முன்னாள் மாணவர்கள் அமைப்பு கல்வியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில் முனைவோர் என சமூகத்தின் நல்வாழ்வில் தங்கள் பங்களிப்பை வழங்கிய 60 முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.