
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் சார்பில் வீடு மற்றும் கார் கடன் மேளா கண்காட்சி கோவை, பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது
(28, 29.1.2023) இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை கோவை காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இந்த மேளாவில் வீட்டுக்கடன், கார் கடன், சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் மற்றும் வியாபாரக் கடன் ஆகியவற்றை வழங்கப்படுகிறது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் துணை பொது மேலாளர் மற்றும் மண்டல தலைவர் ரெஞ்சித் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஆர்.வி.எஸ் கல்வி குழுமங்களின் தலைவர் குப்புசாமி, ஸ்ரீவாரி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லுந்த், மஹிந்திரா பம்ப்ஸ் பி.லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேந்திர ராமதாஸ், ஆர்.ஆர்.ஹவுசிங் இந்தியா பி.லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கர்ண பூபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.