ரோட்டரி கிளப் சார்பில் தொழில்துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழா

ரோட்டரி கிளப் சார்பில் தொழில்துறை சார்ந்த விருதுகள்  வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை மாநகர துணை ஆணையாளர் காந்திமதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. குறிப்பாக கோவிந்த் ட்ரஸ்ட் நிறுவனர் கோவிந்தராஜுழுவிற்கும், தொழில்துறைக்கான சிறப்பு விருதும், தொழில்துறைக்கான சேவை விருது நானோ டெக்னாலஜி துறையை சேர்ந்த அப்துல் காசிம் ஜலீல் அஹமத்திற்கும், ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜார்ஜ்க்கும் , விளையாட்டில் கண்ணியப்பனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பட்டி நானம்மாளுக்கு கோவையின் பெருமைமிகு நபர் என்ற விருதும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.