என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா

டாக்டர்.என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரித் தாளாளர் மற்றும் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர், மருத்துவர் நல்ல பழனிசாமி வருகை தந்து மாணவ மாணவிகளை வாழ்த்திப் பேசினார்.

இவ்விழாவில் கோவை மருத்துவ மைய கல்வி அறக்கட்டளையின் முதன்மைச் செயல் அலுவலர் புவனேஸ்வரன், முதன்மை நிர்வாக அலுவலர் நடேசன், கல்லூரி முதல்வர் ராமசாமி, உதவிப் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.