கோவையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

கோவையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் குறித்த விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்திருப்பது: கோவை குனியமுத்துார் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக நாளை காலை 9 முதல் மாலை, 4 மணி வரை கீழ் கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

சுந்தராபுரம் ஒருபகுதி, இடையர்பாளையம், குனியமுத்துார், புட்டுவிக்கி, சுண்டக்காமுத்துார், கோவைபுதுார், பி.கே.புதுார் மற்றும் நரசிம்மபுரம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.