அமைச்சர் எஸ் பி வேலுமணி பேட்டி

வாரிசு அடிப்படையில் திமுக கட்சிக்கு தலைவரான ஸ்டாலின் , தமிழத்தின் முதல்வரானது போல
நடந்துகொள்வதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார். மேலும் உள்ளாட்சி திறை மேற்கொண்டுள்ள சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் குற்றம்சாட்டினார். கோவையில் தனியார் பள்ளிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அண்ணா அவர்களால் துவக்கப்பட்டு , பலர் பாடுபட்டு, கொண்டுவரப்பட்ட திமுக கட்சிக்கு வாரிசு அடிப்படையில் தலைவரானவர் ஸ்டாலின் எனவும், கட்சிக்கு தலைவராக வந்துவிட்டு தமிழகத்திற்கு முதல்வராகி அனைத்து அவரது அதிகாரதின் கீழ் வந்தது போல என் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என தெரிவித்தார். ஸ்டாலின் குற்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்த அவர், உலக பணக்காரர் பட்டியலில் 10 இடத்திற்குள் ஸ்டாலின் குடும்பம் எப்படி வந்தது என்றும் ,
கலைஞர் டி.விக்கு எப்படி 200 கோடி வந்தது என்றும் கேள்வி எழுப்பினார்.
டெண்டர் விடுவதில் பேக்கேஜ் சிஸ்டம் கொண்டு வந்தது ஸ்டாலின் தான் எனக் கூறியவர்,
ஸ்டாலின் உள்ளாட்சி துறையில் அமைச்சராக இருந்த போது கொண்டு வந்த திட்டங்களை காட்டிலும் இந்த 5 ஆண்டுகள் அதிகளவு சாதனைகள் செய்துள்ளதாக கூறினார். ஸ்டாலினால் உள்ளாட்சி துறையில் நாங்கள் செய்த
சாதனைகளை பொறுத்து கொள்ள முடியவில்லை என தெரிவித்த அவர்,
திமுக ஆட்சியில் செய்ததை விட மூன்று மடங்கு அதிகமாக அதிமுக ஆட்சியில் 21, 985 கோடி அளவில் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்,தமிழகத்திற்கு 4900 எம்.எல்.டி குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆட்சியில் கூடுதலாக 2400_ எம்.எல்.டி குடி நீர் வழங்கப்படுகிறது எனக் கூறினார்.மழை நீர் , திடக்கழிவு மேலாண்மை , சாலை பணிகள்,
வீடு கட்டும் திட்டம், என அனைத்து துறையிலும் சாதனை படைத்துள்ளதாக கூறிய அவர்,
எல்.இ.டி பல்புலள் பொறுத்தியதில் 300 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக கூறினார்
ஸ்டாலினுக்கு பல்வேறு கம்பெனிகள் பினாமிகள் இருக்கலாம், ஆனால் எனக்கு இது பற்றி தெரியாது எனக் கூறிய அவர், கட்சிக்கு தலைவராக உள்ள ஸ்டாலினடம் இருந்து இது போன்ற அறிக்கையை எதிர்பார்க்கவில்லை எனவும் திமுக வில் இருந்த
மற்ற தலைவர்கள் இவரை போல நடக்கவில்லை எனவும் கூறினார்.
உள்ளாட்சி துறையில் பல்வேறு சாதனை படைத்துள்ளதால ஸ்டாலின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயார் எனவும் தெரிவித்தார்.