வரைவு வாக்காளர் பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர்  வெளியிட்டார்.

இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக, இன்று  வரைவு வாக்களர் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டார். இந்த பட்டியலில் ஆண் வாக்காளர்கள் – 1405003 பேர், பெண் வாக்காளர்கள் – 1428218 பேர் மற்றும்  மூன்றாம் பாலினத்தவர் – 288 பேர் என, மொத்தம் – 2833509 பேர் பட்டியலில் உள்ளனர். வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அந்தப் பட்டியலில் தங்களைப் பற்றிய விவரங்கள் சரியாக உள்ளதா இல்லையா,  என்பதைப் பார்த்து சரிசெய்துகொள்ளலாம். அதுபோல, 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தோடு 18 வயது பூர்த்தி  ஆகும் புதிய வாக்காளர்களும், தங்களது பெயரை சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம். சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி 1.09.2018 முதல் 31.10.2018 வரை நடைபெற உள்ளது.