சிபாகா சார்பில் மருத்துவ முகாம்

கோயமுத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் (சிபாகா), கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை & இன்லைப் விசன் கேர், கங்கா மருத்துவமனை மற்றும் ஈஷா யோகா மையம் இணைந்து, சிபாகா உறுப்பினர்களின் நிறுவனங்களில் பணிபுரியும் உழியர்கள், தொழிலாளர்களுக்கு மாபெரும் பல்நோக்கு கட்டணமில்லா மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை அன்று அவினாசி சாலையில் உள்ள கோவை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் முழு உடல் பரிசோதனை, கண் மற்றும் எலும்பு மருத்துவம், யோகாசனப் பயிற்சி, காப்பீடு பற்றிய ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்பட்டது.

இதில் சிபாகா தலைவர் சுவாமிநாதன், செயலாளர் ராமநாதன், சோசியல் பேனல் தலைவர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இம்முகமில் 600க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.