கோவையில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் வழக்கமாக நடைபெறும் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்தும் கேட்டறியப்பட்டது. இனிவரும் காலங்களில் சட்டம் ஒழுங்கை காக்கும் நடவடிக்கைகள் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பேருந்துகள், கனரக வாகனங்கள் சாலை, குடிநீர் போன்ற பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் சிக்கி கொள்வதால் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகர காவல் துணை ஆணையாளர் சந்திஸ், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.