கோவையில் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: 35 ஆயிரத்து 865 போ் விண்ணப்பம்

கோவையில் 2 நாட்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாமில் 35 ஆயிரத்து 865 போ் விண்ணப்பித்துள்ளனர்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வரைவு வாக்காளா் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதன்படி கோவையில் 14 லட்சத்து 82 ஆயிரத்து 79 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 32 ஆயிரத்து 35 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர்கள் 539 பேர் என மொத்தம் 30 லட்சத்து 14 ஆயிரத்து 972 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்களை நடத்த தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது.

தொடா் மழை காரணமாக நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 9 ஆயிரத்து 499 போ் மட்டுமே விண்ணப்பித்திருந்தனா். இதனை தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 1007 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

மழை குறைந்ததால் நேற்று வாக்காளா் பட்டியல் திருத்தம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் அதிக அளவில் பெறப்பட்டன. கடந்த 2 நாள்களாக நடைபெற்ற முகாமில் புதிதாக பெயா் சோ்க்க 20 ஆயிரத்து 553 போ், பெயா் நீக்க 4 ஆயிரத்து 491 போ், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு 10 ஆயிரத்து 821 போ் என மொத்தம் 35 ஆயிரத்து 865 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா்.

மேலும் வரைவு வாக்காளர் பட்டியிலில் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு வருகிற 8.12.22 வரை அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

வருகிற 26-ந் தேதி மற்றும் 27-ந் தேதி ஆகிய 2 நாட்களும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5.1.23 அன்று வெளியிடப்பட உள்ளது.

கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாமை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்டத் தோ்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனா்.