ஆர்.வி. கல்லூரியில் இலக்கியப் போட்டிகள்

காரமடை, டாக்டர்.ஆர். வி‌.கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை இலக்கிய வட்டம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக காரமடை, கலாம் விதைகள் அறக்கட்டளையுடன் இணைந்து டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 91 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்த இலக்கியப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.

கலாம் விதைகள் அறக்கட்டளையைச் சேர்ந்த கனிஷ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசிய உரையில், வருங்கால இந்தியாவின் முன்மாதிரியாக கருதப்படும் டாக்டர். ஏ.பி‌.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை படித்து இன்றைய இளைஞர்கள் அவர் வழியில் நடக்க வேண்டும். அவருடைய நேர்மை, எளிமை, உயரிய குறிக்கோள், தேசப்பற்று, அன்போடு பழகும் தன்மை, நற்சிந்தனை இனிமையான பேச்சு இவை அனைத்தையும் தம்முடைய வாழ்க்கையிலும் கடைபிடித்து வாழ வேண்டும்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் மரக்கன்றுகள் நடுதல், மாலை வேளைகளில் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்தல் போன்ற சமுதாயத்திற்கு நன்மைதரும் செயல்களை செய்ய வேண்டும் என்று பல கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும், நாட்டு நலப்பணித்திட்டத்தில் பங்கேற்று சேவைகள் செய்யும் மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.