எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் மழை நீர் தேக்கம்: காய்கறிகள் அழுகியதால் விவசாயிகள் வேதனை

கோவையில் கடந்த சில நாட்களாக சாரல் மலையும், பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வழிந்து ஓடியது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் மழையின் காரணமாக வெள்ளம் புகுந்தது. அங்கு மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் வைத்திருந்த தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் மழை நீரில் மூழ்கியது. மழைநீர் வடியாததால் காய்கறிகள் அழுக தொடங்கியது.

இதுகுறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறும்போது, மழைக்காலங்களில் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் காய்கறிகள் அழுகி நாசமாக போய்விடுகிறது. மழை நீர் வடிந்தாலும் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. மழை நீர் வடிந்தாலும், சேரும் சகதியில் வியாபாரம் செய்ய முடிவதில்லை. இதனால் விவசாயிகளும் வியாபாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி ஆகி வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டை சீரமைக்க வேண்டும். தொடர்ந்து மழை நீரால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு உதவ வேண்டும் என தெரிவித்தனர்.