ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக இருதய தின விழிப்புணர்வு

கோவையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச தரத்துடன் அதிநவீன இதய சிகிச்சைகளை வழங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை உலக இருதய தினத்தை வியாழக்கிழமை அனுசரித்தது.

அத்துடன் ஒரு நாள் இலவச இருதய ஆலோசனை, பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள திருமதி.வேலுமணி அம்மாள் நினைவு அரங்கத்தில் நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி , தலைமை செயல் அதிகாரி சுவாதி ரோஹித், தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், மருத்துவமனையின் டீன் டாக்டர் சுகுமாரன் மற்றும் இருதய நோய் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இலவச இருதய பரிசோதனை முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. டாக்டர் மனோகரன், டாக்டர் பாலாஜி, டாக்டர்.மாதேஸ்வரன், டாக்டர் நந்தகுமார், டாக்டர் தேவபிரசாத், குழந்தைகள் இருதயநோய் நிபுணர் விக்ரம் விக்னேஷ், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தியாகராஜ மூர்த்தி உள்ளிட்டஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இருதயவியல் நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். விஜய் சதாசிவம் முகாமில் பங்கேற்று, முகாமில் பயன்பெற்ற 400 க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.