என்.ஜி.பி கல்லூரி சார்பில் சுகாதார ஆய்வு முகாம்

டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ஹெல்த்கேர் கிளப், டிபார்ட்மெண்ட் ஆப் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் கே.எம்.சி.ஹெச் ரிசர்ச் பவுண்டேஷனுடன் இணைந்து ஈரோடு நல்லாம்பட்டியில் இரண்டு நாள் சுகாதார ஆய்வு முகாமை நடத்தியது.

“டிஜிட்டல் ட்வின் பிளாட்ஃபார்ம் போர் வாட்டர்-இன் ஹெல்த்கேர் நெஸ்ஸ்” என்ற தலைப்பில் அக்வா -மேப், ஐஐடி மெட்ராஸின் நிதி உதவியுடன் இந்த முகாம் நடைபெற்றது.

கே.எம்.சி.ஹெச் ஆராய்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானிகளான டாக்டர் மோகன்ராஜ் மற்றும் டாக்டர் வேல்முருகன் ஆகியோரின் ஆதரவுடன் ஹெல்த்கேர் கிளப்பை சார்ந்த 40 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரிய உறுப்பினர்களுடன் இந்த சுகாதார முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஈரோடு, நல்லாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 12 வார்டுகளில் இந்த கணக்கெடுப்பு நடந்தது. நல்லாம்பட்டியைச் சுற்றியுள்ள குடும்ப உறுப்பினர்களின் அன்றாட நடவடிக்கைகள், வாழ்க்கை முறை மற்றும் மருத்துவ வரலாறு தொடர்பான 70 கேள்விகள் இந்தக் கணக்கெடுப்பில் இடம் பெற்றன.

மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் சுற்றுச்சூழல் காரணிகளுக்கும் தொற்றாத நோய்களின் பரவலுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.