கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சிறப்பு இருதய பரிசோதனை முகாம்

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் சிறப்பு இருதய பரிசோதனை முகாம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து கே.எம்.சி.ஹெச்.மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மையத்தின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜோசப் கூறியதாவது: இருதயத்தில் பாதிப்பு மற்றும் இருதயத்திலுள்ள ரத்தக்குழாய் அடைப்பால் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு, உடல் பருமன், புகை பிடித்தல், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் மற்றும் பரம்பரை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இருதய பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது.

40 வயதிற்கு மேல் மாரடைப்பு வருவது பொதுவாக உள்ளது. இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம். அதற்கு இருதய பரிசோதனைகளான ரத்தத்தில் சர்க்கரை அளவு, இசிஜி, ரத்தத்தில் கொழுப்பு, ரத்த அழுத்தம், டிஎம்டி எக்கோ ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவில் இருதயத்தில் பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும்.

மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள்: ஒருவரின் சாப்பாட்டிற்கு முன்பான ரத்த பரிசோதனையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 க்கு மேல் இருந்தாலோ, சாப்பாட்டிற்கு பின்பு 180 க்கு மேல் இருந்தாலோ, 3 மாத சராசரி சர்க்கரை அளவு (எச்பிஏ1சி) 6 க்கு மேல் இருந்தாலோ அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது.

ரத்த அழுத்தம் 140 – 80 க்கு மேல் இருந்தால் அதிக ரத்த அழுத்தமாகும். ஒரு மில்லி ரத்தத்தில் கொழுப்பு 200 மில்லி கிராமிற்கு மேல் இருந்தால் அவருக்கு கொழுப்பு உள்ளது. ஒருவரின் உடல் உயரத்திற்கும், அவரது எடைக்கும் ஏற்ப உடல் எடை உள்ளதா என்பதை கண்டறிய உடல் பருமன் குறியீடு (பிஎம்ஐ) மூலம் கணக்கிடப்படுகிறது. அதன்படி 25 பி.எம்.ஐக்கு மேல் இருந்தால் உடல் பருமன் உள்ளது.

இவ்வாறு சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, உடல் பருமன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகைப்பிடித்தல், உடற்பயிற்சியின்மை, கட்டுப்பாடற்ற உணவு முறை மற்றும் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருப்பவர்கள் ஆகியோருக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

அவர்களுக்கு இருதயத்தில் அடைப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும். அடைப்பு இருக்கும்பட்சத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் அடைப்புகள் சரி செய்யப்படும். இதன் மூலம் மாரடைப்பை தடுக்க முடியும் என்றார்.

இருதய பரிசோதனை முகாம்: கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சிறப்பு இருதய பரிசோதனை முகாம் தற்போது நடந்து வருகிறது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடக்கிறது. தினசரி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் இருதய பாதிப்புகளை கண்டறிய அடிப்படை பரிசோதனைகளான சர்க்கரை நோய் பரிசோதனை, கொழுப்பு சத்தின் அளவு, ஈசிஜி, எஃகோ/டிஎம்டி ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள இத்தகைய பரிசோதனைகள் மருத்துவரின் ஆலோசனையுடன் ரூ.1,250க்கு செய்யப்படுகிறது.

முகாம் நடைபெறும் இடம்: கே.எம்.சி.ஹெச் அவினாசி ரோடு, கே.எம் .சி.ஹெச் சிட்டி சென்டர், ராம்நகர், கே.எம்.சி.ஹெச் சூலூர் சென்டர், கே.எம் .சி.ஹெச் கோவில்பாளையம் சென்டர்.

முன்பதிவிற்கு: 733 9333 485.