கோவையில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

கோவையில் 34 வது இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது. 1529 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கிராமப்புறங்களில் 1081 முகாம்களும், மாநகராட்சிப் பகுதிகளில் 339 முகாம்களும், நகராட்சிப் பகுதிகளில் 109 முகாம்களும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் இடங்களை பொதுமக்கள் மாவட்ட இணையதளம் coimbatore.nic.in வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 2,14,024 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை 2888241 நபர்களுக்கும், இரண்டாம் தவணை 2646998 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

15-18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 140239 முதல் தவணையும், 110400 இரண்டாம் தவணையும், 12-14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 90250 முதல் தவணை, 62619 இரண்டாம் தவணையும் தடுப்பூசிகள் என மொத்தமாக 62,32,938 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக பூஸ்ட்டர் தடுப்பூசியானது இரண்டாம் தவணைப் பெற்று 6 மாதங்கள் அல்லது 26 வாரம் ஆன 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக அரசு தடுப்பூசி மையங்களில் போடப்படுகிறது.

Source: PRO CBE