எஸ்.என்.எம்.வி கல்லூரியில் சுதந்திர தின நிகழ்வு

கோவை மலுமாச்சம்பட்டி ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் சுப்பிரமணி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் துணைத்தலைவர் ஸ்ரீ மஹாவீர் போத்ரா இந்திய கலை இலக்கிய பண்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

கல்லூரியின் செயலாளர் சுனில்குமார் நஹாட்டா சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வோம் என்று பேசினார்.

கோவை நலச்சங்க கருவூலர் அசோக் லூனியா இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுபடுத்தி பேசி, சுதந்திர தின உறுதி மொழியை முன்மொழிந்து அனைவரையும் ஏற்கச்செய்தார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக Col CST Swamy Commanding Officer 25 Naga Battalion NCC கலந்து கொண்டு கலாம் அவர்களின் கனவு காணுங்கள் பொன் மொழியை நினைவு கூர்ந்து ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு லட்சிய கனவு வேண்டும், அதை நோக்கிய பயணத்தில் கடின உழைப்பையும் விடா முயற்சியையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை தன் வாழ்வியல் அனுபவங்களோடு தொடர்புபடுத்தி பேசினார்.

கலை நிகழ்சிகளைத் தொடர்ந்து தேசிய மாணவர் படை சாதனையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 75 வது சுதந்திர தின விழா கல்லூரியில் ஒருவார விழாவாக கொண்டாடப்பட்டு அதனை முன்னிட்டு தேசத்தை நேசிப்போம் காப்போம் என்ற 75 அடி பதாகையில் 7500 க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டு உறுதி மொழி ஏற்றனர்.

அதன் தொடர்ச்சியாக 75 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது. இவ்விழாவில் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்களும், பேராசிரியர்களும் பங்கேற்றனர்.