இந்துஸ்தான் கல்லூரி சார்பில் செஸ் ஒலிம்பியாட் முன்னோட்டப் பேரணி

கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டியினை வரவேற்கும் விதமாக, முன்னோட்டப் பேரணி நடத்தப்பட்டது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு நிகழ்வாக கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நேரு விளைாயட்டு அரங்கில் இந்த பேரணி துவங்கியது.

இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரவிசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்துஸ்தான் கல்லூரியின் விளையாட்டு வீரர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் என 500 பேர் இந்த பேரணியில் பங்கேற்றனர். மேலும் இதில் பங்கேற்ற மாணவர்கள் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதமாக அதன் புகைப்படங்களையும், பதாகைகளையும் கையில் ஏந்தி பேரணி சென்றனர்.

மேலும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஸ்பிரபு, முதன்மை கல்வி அலுவலர் கருணாகரன், முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.